சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
சாலை ஓரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்
ஆல்காட் குப்பம் முதல் ஓடை குப்பம் வரையிலான பகுதியில் பெசன்ட் நகரில் சுமார் 45 நீர் தேங்கிநிற்கும் பகுதிகளையும், காமராஜர் சாலையில் 14 இடங்களையும், சிந்தாதிரிப்பேட்டையில் 4 இடங்களையும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை செயல்படுத்துவதற்காக சென்னை குடிநீர் வாரியம் கண்டறிந்தது. மழையால் மழைநீர் தேங்கி நிற்கிறது.
தேங்கிநிற்கும் மழை நீரை நிலத்திற்குள் மீண்டும் செலுத்த முடியும் என்பதால், வெள்ளத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த இடங்களில் பொருத்தமான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நிறுவப்பட்டன.
புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் நிலத்தடி நீர்நிலைகளை செறிவூட்டம் செய்யதுளையிடும் குழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மழைநீர் வடிகால்களை அருகிலுள்ள திறந்த கிணறுகள் / செறிவூட்ட குழிகள் மற்றும் அருகிலுள்ள பூங்காக்களுடன் இணைக்கலாம்.