Skip to main content
  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்ச் சட்டத்தின் பிரிவு 81ன் பிரிவு 34, 35 மற்றும் 36 மற்றும் துணைப் பிரிவு (1) மற்றும் உட்பிரிவு (2) இன் பிரிவு (i) ஆகியவற்றின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னாட்சி அதிகாரம் கொண்ட வாரியம் GOMS.No.75 MA இல் & டபிள்யூ.எஸ். திணைக்களம். dt.8.5.98 வாரியத்தின் பகுதிக்குள் உள்ள வளாகத்தில் நீர் வரி மற்றும் கழிவுநீர் வரி வசூலிப்பதற்கும், வசூலிப்பதற்கும் பின்வரும் விதிமுறைகளை உருவாக்குகிறது.

1. இந்த விதிகள் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரி (வரி மற்றும் வசூலித்தல்) விதிகள் 1991 என அழைக்கப்படும்.

2. இந்த விதிகள் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

இந்த விதிகளில், தருவாய் அல்லது மற்றபடி தேவைப்படும் போது:

  • “சட்டம்“ எனப்படுவது சென்னை பெருநகர குடிநீர் விநியோக மற்றும் கழிவு நீர் சட்டம், 1978 (தமிழ்நாடு 28/1978 சட்டம்) ஆகும்.
  • ”மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டு மதிப்பு“ என்பது சட்டப் பிரிவு 35-ல் சொல்லப்பட்டவாறு வளாகத்தின் ஆண்டு மதிப்பு ஆகும். குடிநீர் வரி மற்றும் கழிவு நீர் வரி விதிக்க இதுவே அடிப்படையாக அமைகிறது.
  • “வளாகம்“ எனில் எந்த வகை நிலம் அல்லது கட்டிடத்தைக் குறிக்கும்.
  • ”கழிவு நீரகற்று வரி“ எனில், சட்டத்தின் 34-ம் பிரிவில் துணை பிரிவு (1) ன் படி வாரிய எல்லையில் அமைந்துள்ள வளாகங்களின் மீது விதிக்கப்பட்ட கழிவுநீர் வரியைக் குறிக்கும்.
  • “குடிநீர் வரி” எனில் சட்டத்தின் 34-ம் பிரிவில் துணை பிரிவு (1) ன் படி வாரிய எல்லையில் அமைந்துள்ள வளாகங்களின் மீது விதிக்கப்பட்ட குடிநீர் வரியைக் குறிக்கும்.
  • இந்த விதிகளில், வரைவுரையாக பயன்படுத்தப்பட்ட வாக்கியங்கள் சொற்கள் மற்றும் வெளிப்பாடுகள் யாவும், சட்டத்தில் வரைவுரையாக அவ்வவ்விடங்களில் தரப்பட்ட பொருள்படியே அமையும்.

ஆள்வை அதிகாரம் பெற்றவர், சட்டத்தின் உரிய பகுதிகளில் மற்றும் பிரிவுகளில் பொருத்தமாக சொல்லப்பட்டவாறு, நபர்கள் மற்றும் வளாகங்களுக்காக வரியினை மதிப்பிட்டு தயாரித்து அந்த விவரங்கள் அடங்கிய கணக்கு புத்தகங்களை வைத்திருக்கவும் வேண்டும்.

தனித்தனியான மதிப்பீடுகளின் விரிவான விவரங்கள் அடங்கிய வரி மதிப்பீட்டு கணக்கு விவரங்களில் ஏதேனும் அல்லது அவற்றின் அவ்வாறான ஒரு பகுதி விவரங்களை இலவசமாக ஆய்வு செய்ய வரி செலுத்துபவருக்கு கீழ்க்கண்டவாறு ஏது செய்யப்படுகிறது.

4. வாரியத்தின் எந்த வகை வரியையும் செலுத்தும் நபர்கள் இலவசமாக மேற்சொன்ன நூல்களிலிருந்தும் ஆவணங்களிலிருந்தும் விவரங்களை அறியவும், நகலாக எடுத்துக்கொள்ளவும் உரிமையுள்ளவர்கள் ஆவர்.

5. வாரியம் நிர்ணயித்துள்ள வரியை செலுத்தும் எந்த ஒரு நபரும் ஒவ்வொரு மாதமும், வாரியம் நிர்ணயிக்கும் ஒரு நாளில் அல்லது நாட்களில், வாரிய வரி பேரேடுகளின் உரிய பகுதிகளை இலவச கட்டணத்தில் ஆய்வு செய்ய ஏது செய்யப்படுகிறது.

(1) சட்டத்தின் நோக்கிற்காக, வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு உள்ள வளாகங்களுக்கு வரி விதிக்கலாம்.

  • அ) குடிநீர் வரி மற்றும்
  • ஆ) கழிவு நீர் அகற்று வரி

(2) சட்டக்கூறு, (1) ல் சொல்லப்பட்ட வரிகள், விதி 7-ல் சொல்லப்பட்டுள்ள விகிதங்கள்படி, ஆனால் சட்டத்தின் 34-ம் பிரிவில் துணை பிரிவு (2)-ல் காட்டப்பட்ட வரம்புக்கு உட்பட்டு விதிக்கப்பட வேண்டும்.

(1) ஒவ்வொரு வளாகத்திற்கும் ஆண்டு ஒன்றிற்கு கீழ்கண்டவாறு வரி கட்டணம் என நிர்ணயிக்கப்படுகின்றது.

  • (அ) மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டு மதிப்பில் 1.5%.
  • (ஆ) மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டு மதிப்பில் 5.5% கழிவு நீரகற்று வரி.

(2) ஏதாவது ஒரு நிலம் எந்த கட்டிடத்துடன் சேராமல் அல்லது குடிசையுடன் இணைந்த பகுதியாக பயன்பாட்டுடன் அல்லது துணையாக அமையாத பகுதியாக இருப்பின், அதிகாரம் பெற்ற அலுவலர் / அமைப்பு நிலத்தை அல்லது வளாகத்தை இவற்றில் எதுவாயினும் மதிப்பிட்டு, இந்த விஸ்தீரணத்திற்கு உரியதை தானே உரிய வரி விகித முறையில் ஆண்டு மதிப்பை நிர்ணயித்து கீழ்க்கண்டவாறு ஒரு மனை அளவுக்கு அதாவது 220 ச.மீ. க்கு உயர்ந்தபட்ச அளவில் நிர்ணயிக்கலாம்.

  • (அ) குடிநீர் வரி ரூ.1/-
  • (ஆ) கழிவு நீரகற்று வரி ரூ.2/-

8. அதிகாரம் பெற்ற அலுவலர் / அமைப்பு (குடிநீர் வரி மற்றும் கழிவு நீரகற்று வரி) ஒவ்வொரு வளாகத்திற்கும் அல்லது ஒரு பகுதிக்கும் ஆண்டு ஒன்றுக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்க வேண்டும்.

விதி எண். 8 மூலம் நிர்ணயிக்கப்பட்ட வரியினை இரு அரை ஆண்டுகளுக்கு என சமமாக பிரித்து ஏப்ரல் முதல் தேதி மற்றும் அக்டோபர் முதல் துவக்கமே என விதித்து அவைகளை முறையே செப்டம்பர் 30-ஆம் தேதி மற்றும் மார்ச் 31-ஆம் தேதி வரை என முறையே பிரித்து வரி கோரப்படும்.
அரையாண்டுக்கான குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் அகற்று வரி இரண்டும் அரையாண்டின் துவக்கத்தின் முதல் பதினைந்து நாட்களிலேயே கேட்பாக மாறும். அது உரிய அலுவலர் மூலம் பரிந்துரைக்கப்பட்டவாறு வரியாக செலுத்தப்பட வேண்டும். வாரியமானது வரி செலுத்தும் காலத்தை செயல் உத்தரவு அறிவிப்பு மூலம் கால நீட்டிப்பு வழங்க பரிசீலிக்கலாம்.

10. கேட்பு அறிவிப்பு மூலமாகவோ அல்லது குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் அகற்று வரி அட்டையில் குறிப்பிட்டுள்ளவாறோ அல்லது வாரியம் அவ்வப்போது தெரிவிக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வரி ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.

  • 10. (i) தாமதமாக குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வரி செலுத்தலுக்கு வாரியம் மேல்வரி கட்டணத்தை வசூலிக்கும். கூட்டு வரியாக 01.10.1997 முதல் 31.03.2003 வரையிலான காலத்திற்கு 2% ஒரு மாதத்திற்கு எனவும், 01.04.2003 முதல் மாதம் ஒன்றுக்கு 1.25% எனவும் வசூலிக்கப்படும். ஆண்டு மதிப்பு குறித்து பரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்து இருக்கும் பட்சத்தில், இதற்கான உத்தரவு பெற்ற நாள் அல்லது வாரியம் தகவல் தெரிவித்த நாள் இவற்றில் எது முந்தைய நாளோ அன்றிலிருந்து 30 நாட்களுக்குள் மாற்றப்பட்ட கட்டணத்தை செலுத்தும் காலமாகக் கொள்ள வேண்டும்.

11) சட்ட பிரிவு 35-ன் துணை பிரிவு (3)-ன் படி வளாகங்களின் ஆண்டு மதிப்பாக வாரியம் உள்ளாட்சி அமைப்புகள் செய்த மதிப்பீட்டினை ஏற்கும் நிலையில் தனியாக வரி மதிப்பீடு பேரேடுகள் பராமரிக்க தேவை இல்லை, அதற்கு பதிலாக வரி பேரேடுகளில் ஒவ்வொரு வளாகத்தின் ஆண்டு மதிப்பு மற்றும் அதற்கான வரி செலுத்தப்பட வேண்டிய விவரம் பதிந்திருக்க வேண்டும்.

12. வாரியமானது வரி மதிப்பீடு கணக்கு நூல்களில், மதிப்பீடு செய்யப்பட்ட வளாகங்கள் மற்றும் அவற்றிற்காக செலுத்த வேண்டிய வரி மற்றும் ஆண்டு மதிப்பு ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அந்த நூல்களில் ஒவ்வொரு மதிப்பீடு தொடர்பாக கீழ்க்கண்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

  • (அ) வரிசை எண்
  • (ஆ) வரி செலுத்துபவர் அடையாள எண்
  • (இ) வீட்டு எண் அல்லது சர்வே எண், தெரு பெயர், தபால் அலுவலக குறி எண், மாநகராட்சி பகுதி போன்ற விவரங்கள் அடங்கிய வளாகத்தின் முழுமையான முகவரி.
  • (ஈ) உரிமையாளர் மற்றும் குடியிருப்பவர் பெயர்
  • (உ) வளாகத்தின் விவரிக்கையுடன் நில விஸ்தீரணம்
  • (ஊ) ஆண்டு மதிப்பு மற்றும்
  • (எ) வளாகத்திற்கான குடிநீர் வரி மற்றும் கழிவு நீரகற்று வரி.

13. ஒரு வளாகத்திற்கு வாடகை கிடைப்பதை வைத்தும், அருகாமையில், இதே போன்ற வளாகங்களுக்கு, வாடகை கிடைப்பதை வைத்தும் அவ்வப்போது மாத வாடகை நிர்ணயிக்க வழங்கப்படும் வழிகாட்டி வெளியீடுகளைக் கொண்டும் வளாகத்தின் மொத்த ஆண்டு வாடகை, சட்டத்தின் 34 மற்றும் 35-ம் பிரிவுகளுக்காக நிர்ணயிக்கப்படும்.

14. ஒவ்வொரு கட்டிடமும் அது கட்டப்பட்டுள்ள நிலம் மற்றும் அதன் உடன் இணைந்த வளாகங்கள் ஆகியவற்றிற்கு வேறு வேறு நபர்கள் உரிமையாளர்களாக இல்லாத நிலையில் அவையாவும் ஒன்றாக மதிப்பீடு செய்யப்படும்.

15. எந்த ஒரு வளாகமும் அதன் ஆண்டு மதிப்பீடு முப்பத்தாறு ரூபாய்க்கு கீழாக இருந்தால் அதற்கு குடிநீர் வரி மற்றும் கழிவு நீரகற்று வரி செலுத்துவதிலிருந்து வரி விலக்கு செய்யப்படும், ஆயினும், அந்த உரிமையாளர் தொழில் வரி, வருமான வரி செலுத்துபவராகவோ அல்லது அவருக்கு வேறு கட்டிடம் அல்லது நிலம் முப்பத்தாறு ரூபாய்க்கு மதிப்பு குறைவாக இருப்பினும் மேற்படி வரி விலக்கு அளிக்கப்படாது.

16. ஒரு முறை மதிப்பீடு செய்தது, மறுமுறை மாற்றம் செய்யும் வரை நடைமுறையில் தொடரும்.

17. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுவாக மதிப்பீடு மாறுதல் செய்யலாம். இதற்காக அதிகாரம் பெற்றவர் வாரியத்தின் ஒப்புதலோடு நகரத்தின் பகுதிகளை தேவைக்கேற்ப குழுக்களாகப் பிரித்து சுழற்சி முறையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யலாம்.

18. முதன் முறையாக கணிப்பீடு நூல் தயாரிக்கும் போதும், விதி 17-ன் படி அல்லது அனைத்து வளாகங்களுக்கும் பொதுவாக மதிப்பீடு மாற்றம் செய்யும் போதும் வளாகத்தில் மாறுதல் ஆகும் போதும் கூடுதல் கட்டுமானம் செய்யப்பட்டு அதிகாரம் பெற்ற அலுவலர் வளாகத்தின் உரிமையாளருக்கு பின்வரும் அம்சங்களை தெரிவித்து அறிவிப்பு செய்ய வேண்டும்.

  • (அ) நூல்களை எங்கு, எப்போது ஆய்வு செய்யலாம்
  • (ஆ) புதிய கணிப்பீடு மாறுதல் எந்த அரையாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது மற்றும்
  • (இ) வாரிய அலுவலகம் அறிவிப்பு செய்த பதினைந்து நாட்களுக்குள் ஆட்சேபனை செய்து தொடர்பு கொண்டு இருப்பின் அது பரிசீலிக்கப்படும்.

(2) அதிகாரம் பெற்ற அலுவலர் ஏதேனும் ஆட்சேபனைகள் வரப்பெறின் அதனை பரிசீலித்து, வரி மதிப்பீட்டு கணக்குகளை இறுதி செய்து வளாக உரிமையாளருக்கு தகவல் தருவார். இவ்வாறான கணக்கீடுகள் அவை கணக்கிடப்பட்ட அரையாண்டின் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக கருதப்படும்.

19.ஏதேனும் காரணங்களால் விதிகளின்படி வரி செலுத்த வேண்டிய நபர் யாரேனும் எந்த அரையாண்டு அல்லது ஒரு வருடம் மதிப்பீடு படி செலுத்த விடுபட்டு இருந்தால், அல்லது மதிப்பீடு அளவை விட குறைவாக அந்த அரையாண்டு அல்லது ஒரு ஆண்டு ஏற்பட்டு இருந்தாலோ அல்லது குடிநீர் வரி அல்லது கழிவு நீரகற்று வரி உரிய முறையில் எந்த அரை ஆண்டிலோ அல்லது ஒரு ஆண்டிலோ மதிப்பீடு செய்ய எந்த ஒரு வளாகத்தையோ நிலத்தையோ ஆண்டு மதிப்பீடு செய்ய விடுபட்டு போயிருந்தால், ஆள்வை அதிகாரம் படைத்தவர் எந்த நேரத்திலும் அவ்வாறான நபருக்கு கணிப்பீடு வரி விவரம் அறிவிப்பு மூலம் பாக்கியை தெரிவித்து, அறிவிப்பு கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் செலுத்த சொல்ல வேண்டும், இவ்வாறானவை சட்ட விதிகளின்படியும் விதிகளில் உள்ளபடி இந்த மதிப்பீடு உரிய அரையாண்டு (அல்லது ஆண்டு) காலத்தில் செய்யப்பட்டதாக அமையும்.

20. வரி கட்டண உயர்வு அல்லது குறைவு என்பது வரி திருத்தம் அல்லது வரி சீரமைப்பாக ஆகாது. மேற்சொன்னவாறு மாற்றப்பட்ட வரி, வரி விதித்த குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

21. வாரியத்தின் அரையாண்டு வரி கேட்பில் தவறுதல்கள் அல்லது பிழைகள் இருப்பின், வாரியம் அவற்றைச் சரிசெய்து துணை கேட்பாக அதே அரையாண்டிலோ அல்லது தொடர்ந்து வரும் அரை ஆண்டிலோ கோரலாம்.

22. (1) குடிநீர் வரி மற்றும் கழிவு நீர் அகற்றுவரி செலுத்தும் வளாகத்தின் உரிமையாளரும், மேற்படி வளாகத்தினை உரிமை மாற்றம் மூலம் பெறுபவரும் உரிமை மாற்றம் நடைபெற்ற 3 மாதங்களுக்குள்ளோ அல்லது மேற்படி உரிமை மாற்றம் பதிவு செய்யப்பட்ட பின்னரோ அதிகாரம் பெற்ற அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்.

22(2) முதன்மையான நிலையில் உள்ள ஒருவரின் மரணத்தின் போது, யாருடைய பெயருக்கு சொத்து உரிமை மாற உள்ளதோ அவர் வாரிசு அல்லது மற்ற வகையாக வரும் போது, மேற்படி மாற்றம் பற்றி அறிவிப்பு, அதிகாரம் பெற்ற அலுவலருக்கு, இறப்பு தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் தர வேண்டும்.

22(3) சட்டக் கூறு (1) மற்றும் (2)-ன் படி அறிவிப்பு, அதிகாரம் பெற்ற அலுவலர் பரிந்துரைத்த படிவத்தின்படி இருக்க வேண்டும். மாற்றப்பட்டவர் அல்லது எந்த நபருக்கு உரிமை மூலம் மாற்றப்படுகிறதோ, எதுவாக இருப்பினும் அவர் தேவைப்படும் ஆவணங்களை ஆதாரமாக, வாரிசு மூலமாகவோ அல்லது மாற்றம் மூலமாக வந்தது என காட்ட வேண்டும்.

22(4) மேற்கண்டவாறு மாறுதல் செய்யும் நபர், ஆள்வை அதிகாரம் உடையவருக்கு அறிவிப்பு செய்யாதபோது, குடிநீர் வரி மற்றும் கழிவு நீரகற்று வரி அவரது வளாகத்துக்கு விதிக்கப்பட்டதை, அவர் மாறுதல் ஆன விபரத்தை அறிவிப்புக்காக தரும் வரையும் அல்லது வாரியத்தில் வளாகத்தைப் பெற்ற நபரின் பெயர் பதிவேடுகளில் பதிவு பெறப்படும் வரையும் செலுத்த வேண்டும். ஆனால் இந்த சட்டக் கூறுகளில் எவையும் மாறுதல் பெற்றவர் வரி கட்ட வேண்டியதை பாதிக்கும்படியோ அல்லது பழைய நிலுவையைக் கோரும் வாரியத்தின் உரிமையை பாதிக்கும்படியோ இருக்காது.

23. (அ) சென்னை பெருநகர எல்லையில் கட்டிடம் கட்டப்பட்டாலோ மறுகட்டுமானம் ஆனாலோ, உரிமையாளர், அதிகாரம் உடைய அலுவலருக்கு அறிவிப்பினை, கட்டி முடித்த அல்லது கட்டிடத்தில் குடி பெயர்ந்த பதினைந்து நாட்களுக்குள் இதில் எது முந்தையதோ அதற்குள் செய்ய வேண்டும்.

23(ஆ) அவ்வாறான தேதி அரையாண்டின் கடைசி இரண்டு மாதங்களில் வருமானால் அறிவிப்பு தரும் பட்சத்தில், சட்டக்கூறு (1)-ல் உள்ள சட்டக் கூறு.(அ)-வில் உள்ள முழுவரி அல்லது உயர்த்தப்பட்ட வரி அந்த உரிமையாளருக்கு, அரையாண்டுக்கு மட்டும் அந்த கட்டிடத்திற்கு மட்டும் நீக்கம் செய்யப்படும்.

23(இ) அரையாண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் அவ்வாறான தேதி அமைந்தால், உரிiமயாளர் அறிவிப்பு செய்த பட்சத்தில் சட்டக் கூறு (அ)-ன் படி வரி அல்லது உயர்த்தப்பட்ட வரி நீக்கம் பெற அந்தக் கட்டிடத்திற்கு மட்டும் அரை பங்குக்கு மிகாமல் அந்த அரையாண்டிற்கு தகுதி உள்ளவர். (குறிப்பிட்ட தேதியிலிருந்து முந்தைய நாட்களுக்கு அந்த அரையாண்டுக்கு விலக்கு பெறுகிறார்)

22(அ) ஏதேனும் கட்டிடம் சென்னை பெருநகர எல்லைக்குள் இடிக்கப்படும் போது அல்லது இடிக்கப்படும் போது உரிமையாளர், அதிகாரம் பெற்ற அலுவலருக்கு அறிவிப்பு செய்யும் தேதி வரை வரி செலுத்தவும் அந்த கட்டிடம் இடிக்கப்படாமல் அழிக்கப்படாமல் இருந்த படியாக செலுத்த வேண்டும்.

22(ஆ) அவ்வாறான அறிவிப்பு அரையாண்டின் முதல் இரண்டு மாதங்களில் செய்யப்பட்டு இருந்தால், அந்த அரையாண்டுக்கான முழு வரியையும் அந்த உரிமையாளர் வரி நீக்கம் பெற தகுதி பெறுகிறார்.

22(இ) அரையாண்டின் கடைசி நான்கு மாதங்களில் அவ்வாறான அறிவிப்பு, உரிமையாளர் செய்யும் போது அவருக்கு வரியின் பாதி அளவுக்கு மிகாமல் விலக்கு அந்த கட்டிடத்தை பொறுத்தமட்டில் வழங்கப்படும், அது இடித்த அல்லது அழித்த நாளில் இருந்து பிற்பட்ட நாட்களுக்கு மொத்த நாட்களில் அந்த அரையாண்டின் விகிதாச்சார அளவில் உரியதாகிறது.

24. குடிநீர் வரி மற்றும் கழிவு நீர் அகற்று வரி ஆகிய ஏதேனும் தொகையை உரிமையாளர் தெரிவித்த கடைசி தேதிக்குள் பாக்கி வைத்து செலுத்தாத போது, வாரியம் குடிநீர் இணைப்பு அல்லது கழிவுநீர் இணைப்பு அல்லது இரண்டையும் துண்டிப்புக்காக அறிவிப்பு செய்ய வேண்டும். இதனை தேவைப்படின் கூடுதல் கால அவகாசம் வழங்கி அதிகாரம் பெற்ற அலுவலர் முடிவெடுப்பார்.

25. விதி எண் 24-ன் படி அறிவிப்பில் கால அவகாசம் வழங்கிய பின்னரும் வாரியத்துக்கு வரி பாக்கி இருந்தால், செலுத்தாத தொகைக்கு அதிகாரம் பெற்ற அலுவலர் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகளை துண்டிக்க ஆவன செய்வார்.

26. முழு நிலுவைத் தொகையையும், ரூபாய் 50/- (ஐம்பது) அபராத தொகையும் மற்றும் இணைப்பு மற்றும் துண்டிப்பு செலவுகளையும் வாரியத்துக்கு முழுமையாக செலுத்திய பிறகு விதி 25-ன் படி குடிநீர் இணைப்பு அல்லது கழிவுநீர் இணைப்பு அல்லது இரண்டையும் திரும்ப பெறலாம். அதிகாரம் பெற்ற அலுவலர், முழுத் தொகையும் செலுத்தப்பட்டது என்று உறுதி செய்த பின்னர் மறு இணைப்பு தர உத்தரவு இடுவார். சில விலக்கு இனங்களில், வாரியம் தனது சுய அதிகாரத்தின் மூலம் பணம் செலுத்த காலம் தரலாம்.

27. வீட்டு உரிமையாளர்களே வரி கட்ட தவறினார்கள், எனவே குடிநீர் வழங்கலை துண்டிக்க வேண்டாம் என வாடகைதாரர்கள் வேண்டினால், அது பரிசீலிக்க இயலாது. முந்தைய உரிமையாளர்கள் வைத்த பாக்கிக்காக குடிநீர் இணைப்பைத் துண்டிக்க வேண்டாம் எனும் கோரிக்கையும் பரிசீலிக்கப்படாது.

28. நில வருவாய், அரசாங்க பாக்கி, வளாகத்தின் கட்டணம் அல்லது நிலத்தின் மீது மற்றும் அசையும் சொத்துக்கள் அந்த வளாகத்தில் நபரால் செலுத்த வேண்டிய வரி இவைகளை முன்னதாகவே செலுத்திய பிறகே குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி கட்டிடங்களில் ஏற்படுகிறது.

29. முன்மொழிவில் உள்ள விதிகள் வரைவுரைக்கப்பட்டு சட்டம் மூலம் நிர்ணயிக்கப்பட்டு, நடைமுறைக்கு வரும் காலம் வரை, தற்போது நடைமுறையில் உள்ள சென்னை மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அல்லது இதர உள்ளூராட்சி விதிகள் நடைமுறையில் இருக்கும்.

30. உரிய காலத்தில் செலுத்தப்படாத, விதிகளுக்கு உட்பட்ட எந்த ஒரு வரிக்கும், அதிகாரம் பெற்ற அலுவலர் உரிமையாளருக்கு நிலுவையை செலுத்தக் கோரி கேட்பினை அனுப்பி, நிலுவையைச் செலுத்தத் தவறினால், விதி 32-ன் படி கீழ்க்கண்டவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிப்பார்.

31(i). விதி 30-ன் படி தொகை பாக்கியினை அறிவிப்பு செய்து, கேட்ட பிறகும், உரிய காலத்தில் செலுத்த தவறினால், அதிகாரம் பெற்ற அமைப்பு ஏன் தொகை கட்டப்படவில்லை என விளக்கம் இல்லாத போது, அந்த அமைப்பு பற்றுகை பிடியாணை மூலம் அசையும் சொத்தினையோ அல்லது தொகை செலுத்த தவறியவரின் கட்டிடத்தில் அல்லது நிலத்தில் உள்ள அசையும் சொத்துக்களையோ, பாக்கியுள்ள தொகைக்காகவும், பிடியாணை கட்டணம், ஏலக் கட்டணம் மற்றும் விற்பனைக்கான ஏற்பாட்டில் உண்டாகும் செலவு இவைகளுக்காகவும் கைப்பற்றுவார்.

31(ii). உரிமை வழக்கு நடைமுறை சட்டம் 1908-ன் பிரிவு 60-ல் உள்ள துணை பிரிவு (1) ல் விவரிக்கப்பட்ட அசையும் சொத்துக்கள் கைப்பற்றப் படலாகாது.

31(iii). ஏதேனும் காரணங்களால் கட்டணம் கட்டத் தவறியவரின் சொத்து கைப்பற்றல் நடைமுறைப்படுத்த இயலாத போது, குற்றவியல் நடுவர் முன்பு அவரின் மீது அதிகாரம் பெற்ற அமைப்பு வழக்கு தொடரலாம்.

31(iv). இந்த சட்டத்தின்படி, உரிமையியல் நீதிமன்றத்தில் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வரி வசூலிக்கவும் மற்ற இதர தொகைக்காக வாரியம் நிலுவைதாரர் மீது வழக்கு தொடுக்க தடையேதும் இல்லை.

32. அதிகாரம் பெற்ற அமைப்பு எழுத்து மூலமான தனி உத்தரவின் மூலம் பிடியாணை செயல்படுத்தவல்ல எந்த ஒரு அலுவலரும் சூரிய உதயம் முதல் சூரியன் மறைவுக்கு முன்பாக, வெளிப்புற அல்லது உட்புற கதவு அல்லது ஜன்னல் ஆகியவற்றை ஏதேனும் ஒன்றை தேவைப்படின் உடைக்கவும், அவ்வாறான கட்டிடம், கட்டணம் கட்ட தவறியவரின் சொத்து என இருக்குமாயின், தவறியவரின் சொத்தை கைப்பற்ற காரணம் மற்றும் அதிகார அறிவிப்பு செய்த பிறகு முறையாக நுழையவும் அனுமதிக்கப்படும் தொகை செலுத்தவும், கைப்பற்றப்பட்ட சொத்துக்களை திரும்ப பெறவும் குறிப்பிட்ட கால அவகாசம் அனுமதிக்கப்படும்.

33. பிடியாணை செயல்படுத்த ஆணையிடப்பட்ட அலுவலர், அதை நிறைவேற்றும் முன்பாக, வரியையும் பிடியாணை கட்டணத்தையும் கோருவார். வரி பாக்கியும் பிடியாணை கட்டணமும் செலுத்தினால் எந்த நடவடிக்கையும் செய்யலாகாது. ஆனால், வரி அல்லது பிடியாணை கட்டணம் செலுத்தாவிட்டால் அலுவலரானவர்;

  • i) அவர், இது தேவை என எண்ணும், கட்டணம் செலுத்த தவறியவரின் அசையும் சொத்தைக் கைப்பற்றலாம்.
  • ii) கைப்பற்றல் விவர சீட்டில் கைப்பற்றிய பொருள்களை குறிப்பிட வேண்டும்.
  • iii) சொத்து உரிமையாளரிடம், பொருள்களை கைப்பற்றும் போது கைப்பற்றல் விவர சீட்டின் நகல் ஒன்றும் விற்பனை அறிவிப்பையும் தர வேண்டும்.
    ஆயினும், ஏழு நாட்கள் தொகை செலுத்தவும் சொத்தை திரும்ப பெறவும் அனுமதிக்க வேண்டும்.

34. இந்த இக்கட்டு நிலை மிகையாக இருத்தலாகாது, சொல்லப் போனால், வரி பாக்கி உள்ள தொகைக்கு சற்றேறக்குறையாகவோ அல்லது இணையாகவோ அதாவது வரி பாக்கி தொகை மற்றும் இதர செலவுகள், பிடியாணை, பொருள் பாதுகாப்பு மற்றும் விற்பனை இவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

35(i). வரி பாக்கியை அதனை கட்டத் தவறியவர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வரி, பிடியாணை செலவு, இடர்பாடு கட்டணம், பொருள்களை காக்க ஏற்படும் செலவு ஆகியவற்றை குறிப்பிட்டக் காலத்தில் செலுத்தத் தவறினால், அதிகாரம் பெற்ற அமைப்பு பிடியாணையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்காவிட்டால், விதி 35ன் படி, கைப்பற்றப்பட்ட சொத்து அல்லது அதன் பகுதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்து அதன் மூலம் பெறப்பட்ட வரவு, வரி பாக்கிக்கும், பிடியாணை கட்டணத்துக்கும், இடர்பாடு கட்டணம், பொருள் பாதுகாப்பு செலவு இவைகளில் வரவு வைக்கப்பட்டு மீதம் உள்ள பொருட்கள், உரிமையாருக்கே திரும்ப வரும். இதற்கு அந்த நபர் உரிய காலத்தில் விண்ணப்பம் செய்திடல் வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் வராத போது அப்பொருள்கள் வாரியத்திற்கு உரியதாகும். இந்த வகையில் வசூலான தொகை போதாத நிலை இருப்பின் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வரி, பிடியாணை கட்டணம், இடர்பாடு கட்டணம், பொருள் பாதகாப்பு மற்றும் விற்பனை செலவு வகைகளில் உபரி கட்டணம் பாக்கி இருப்பின், அதிகாரம் பெற்றவர் விதிகள் 33 மற்றும் 34 படி மீதமுள்ள பாக்கிக்காக நடவடிக்கை எடுப்பார்.

35(ii). கைப்பற்ற பொருள் அழுகக் கூடியதாகவே அல்லது வேகமாக சுருங்கக் கூடியதோ அல்லது பாதுகாக்க அதிக செலவு ஆகக் கூடியதாக இருந்தால் அல்லது பாதுகாப்புச் செலவு சொத்து மதிப்பை விட அதிகமானால், நிலுவைத் தொகைச் செலுத்தாத நிலையில் அதிகாரம் பெற்ற அமைப்பு மேற்படி கைப்பற்றப்பட்ட பொருளை குறிப்பிட்ட காலத்திற்குள் விற்று நிலுவைத் தொகையைப் பெற முயல்வார்.

35(iii). அதிகாரம் பெற்ற அலுவலர் ஏதேனும் ஆட்சேபணை, உரிய கால அவகாசத்திலேயே தரப்பட்டால் விற்பனையைத் தள்ளி வைத்து, ஆய்வினை முன்னிட்டு, அதிகாரம் பெற்ற அலுவலர் சொத்தானது ஏலத்திற்கு உரியது அல்ல என்று முடிவு எடுத்தால் அதனை திரப்பித் தரலாம் அல்லது ஏற்கனவே விற்பனை ஆகி இருப்பின் அந்த நடவடிக்கையால் பெற்ற தொகைக்கு அந்த நபர் உரியவர் ஆகிறார் மேலும் மீண்டும் விதி 33 மற்றும் 34-ன் படி அனைத்து கட்டணங்கள் மற்றும் செலவு ஆன முதலாவது இடர்பாடு போன்றவை கட்டணம் செலுத்த தவறியவரிடம் இருந்து பெறத் தக்கன.

36(i). தொகை பாக்கி காரணமாக இடர்பாடு பணி செய்ய கட்டணம் கீழ்கண்டவாறு சொல்லப்பட்டபடி வசூலிக்க வேண்டும்.

தொகை பெறப்பட வேண்டியது கட்டணம் ரூ.பை
ரூ.25-க்கு கீழே 5.00
ரூ.25-ம் அதற்கு மேலும் ஆனால் ரூ.50-க்கு கீழே 7.00
ரூ.50-ம் அதற்கு மேலும் ஆனால் ரூ.100-க்கு கீழே 15.00
ரூ.100-ம் அதற்கு மேலும் 25.00

36(ii). இவ்வாறான கட்டணம் அனைத்து செலவுகளையும் சேர்ந்தது, கீழ்க்கண்டவை தவிர,

  • (அ) கால்நடை பராமரிப்பு செலவு அல்லது இடர்பாடு சொத்து நிறுத்தி வைத்திருப்பதால் ஆகும் செலவுகள், மற்றும்
  • (ஆ) சொத்தை பொறுப்பாக பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.5/- வீதம் வரி

37(i). வரிகட்ட தவறியவரின் அசையாச் சொத்து தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் இடர்பாடுக்கு உரியது.

37(ii). நகர எல்லைக்கு வெளியில் உள்ள சொத்தை இடர்பாடு செய்ய, அதிகாரம் பெற்ற அலுவலர் பிடியாணையை உரிய தமிழக அரசு பணியாளருக்கு தமிழ்நாடு அரசு வழிமுறை மூலம் பொதுவாக அல்லது சிறப்பு உத்தரவு கடிதம் மூலம் பணிக்கலாம்.

37(iii). அவ்வாறான அரசு பணியாளர் தானே பிடியாணையை செயல்படுத்தலாம் அல்லது தனது கீழே உள்ள பணியாளர் மூலம் ஆற்றலாம்.

37(iv). விதி 35 மற்றும் 39 (இரண்டும் இணைந்து) கீழ்கண்ட சட்டக் கூறு மாறுதல்களைக் கொண்டு, பிடியாணை செயலாக்கம் மற்றும் விற்பனை செயலாக்கம் மற்றும் விற்பனை நடவடிக்கை நிறைவேற்ற வேண்டும்.

37(v). விதி 35-ன் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அதிகாரம் பெற்ற அலுவலரின் தனி உத்தரவு எழுத்து மூலம் தேவை இல்லை, மேற்படி பணி அரசு பணியாளரிடம் தரப்படும் போது அவர் தனது கீழ் உள்ள அலுவலரிடம் பணியை ஒதுக்கும் போது ஒரு எழுத்து மூலமான தனி உத்தரவின் மூலம் வழங்கி கீழ்நிலை அலுவலருக்கு விதிப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்குவார்.

37(vi). விதி 37-ன் படி நடவடிக்கை எடுக்க அரசு பணியாளர் வசம் பிடியாணை அனுப்பப்படும்போது அவர் அதிகாரம் பெற்ற அலுவரலரின் கூடுதல் ஆணைகள் இல்லா நிலையில் சொத்தினை, விற்க ஆணை பிறப்பிப்பது, விற்பனை முடித்தல் மேலும்,உள்ளூரில் ஏற்பட்ட அவசிய செலவுகள் பிடிப்பு போக விற்பனை தொகையினை அதிகாரம் பெற்ற அலுவலருக்கு அனுப்பலாம்.

37(vii). இவ்வாறான விற்பனை செய்யும் போது மேற்படிச் சொத்தினை அரசு பணியாளர் தனக்கோ அல்லது தனது கீழான பணியாளருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ விற்பனை செய்வது சட்டத்திற்கு முரணானது.

38. குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வரி எந்த கட்டிடத்திற்கோ அல்லது நிலத்திற்கோ முழுமையாக அல்லது பகுதியாக நிலுவையாக இருப்பின் விதி 24 –ன் படி அதிகாரம் பெற்ற அலுவலர் , மேற்படி நிலுவைதாரர் நிலுவையை உரிய காலத்தில் செலுத்தாத போது, கால அவகாசம் தந்து அப்போது கட்டிடம் அல்லது இடத்திற்கு உரியன செலுத்தாத போது, அதிகாரம் பெற்ற அலுவலர் அசையா சொத்தினை கைப்பற்றி விற்பனை செய்யலாம், இந்த கட்டத்தில் மேலே சொன்ன வழிமுறைகள் யாவும் கையகப்படுத்தல் மற்றும் விற்பனைகளுக்கு ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
நிலுவைதாரர் முனைந்து கையகப்படுத்தலை தவிர்க்காத நிலையில் அவர் நிலுவை வசூலுக்கு எதிராக வழக்கு போட அல்லது நீதிமன்றம் செல்ல இயலாது.

39. கால நிர்ணயத்துக்குள் யாரேனும் முழுமையாக அல்லது ஒரு பகுதி வரி செலுத்தப்படாமல் விதி 9 மற்றும் 10-ல் உள்ள நிலையில் அவர் இந்தியாவை விட்டு சென்றவர் அல்லது அவருடைய இருப்பிடத்தை அறிய இயலாது நிலையில், அந்த தொகையோ அல்லது அதன் ஒரு பகுதியோ எது நிலுவையில் உள்ளதோ அதனை முழுவதும் நில வருவாய் போல கைப்பற்ற வேண்டும்.

40(i). கால நிர்ணயத்துக்குள் யாரேனும் முழுமையாக அல்லது ஒரு பகுதி வரி செலுத்தப்படாமல் விதி 9 மற்றும் 10-ல் உள்ள நிலையில், குற்றவியல் நடுவர் முன்பு அவர் வேண்டுமென்றே கட்டணத்தை கட்ட தவறினார் என ஆதாரப்பூர்வமாக நிரூபித்து, இரண்டு மடங்கு தொகைக்கு மிகாத தண்டனையைக் கோரி கீழ்க்கண்டவற்றிற்காக வழக்கு தொடுக்கலாம்.

  • (அ) வரி பாக்கி மற்றும் பிடியாணை கட்டணம் பாக்கி மற்றும்
  • (ஆ) கைப்பற்றல் ஏதேனும் இருப்பின் கைப்பற்றல் ஆனதற்கான கட்டணம், விற்பனை வரை பொருள் பாதுகாப்பு செலவு,

40(ii). ஏதேனும் குற்றத்திற்காக துணை சட்டக் கூறு (i)-ன் படி யாரேனும் தண்டிக்கப்படும் போது அபராத தொகையுடன் செலுத்தி வாரியத்திற்கு அது திரும்ப கிடைக்க குற்றவியல் நடுவர் விதிப்பார். பல்வேறு இனங்களில் துணை சட்டக் கூறு (i)-ல் (அ) மற்றும் (ஆ) படி அவர் தன்னுடைய சுய அதிகாரம் மூலம் முழுமையாகக் கைப்பற்றி அந்த தொகையை வாரியத்திற்கு தரவும், விசாரணை செலவும் விதிக்கலாம்.

41. மேலே சொல்லப்பட்ட விதிகளின்படி நடைபெறும் எந்த ஒரு விற்பனை அல்லது கைப்பற்றப்பட்ட சொத்தினையும் வாங்குதல் ஆகியவற்றில் எந்த அலுவலரும் அல்லது வாரியத்தின் சார்பு நிலை பணியாளர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கு பெறக் கூடாது. விற்பனை சொத்தினை வாங்கக் கூடாது.