சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
வரலாற்றுப் பின்புலம்
19ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதி வரையிலும். சென்னையில் ஆங்காங்கே இருந்த அதிக ஆழமில்லாத கிணறுகள். குளங்களில் இருந்துதான் சென்னைக்கு நீர் கிடைத்து வந்தது. திரு.பிரேசர் என்ற கட்டுமானப் பொறியாளர் சென்னைக்கு வடமேற்கே 160 கி.மீ தொலைவில் இருக்கும் கொற்றலையாறில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரலாம் என்ற கருத்துருவை அப்போதைய அரசாங்கத்திடம் முன்வைத்தார். அது ஏற்கப்பட்டது. கொற்றலையாறின் குருக்காக தாமரைப்பாக்கத்தில் ஒரு அணையைக் கட்டி அங்கிருந்து நீரை சோழவரம் ஏரிக்கு திருப்பிவிட்டு அங்கிருந்து புழல் ஏரிக்கு கால்வாய் வழியாகத் தண்ணீரை அனுப்பலாம் என்ற திட்டம் இந்தக் கருத்துருவில் சொல்லப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் ரூ.18.50 இலட்சம் செலவில் 1870ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்டன. செங்குன்றத்தில் நீரை அடைத்து வைத்திருந்து தேவைக்கேற்ப நிலத்தின் வழியாக சென்னைக்கு நீரினை அனுப்புவதற்காக ஒரு அடைப்புத் தடுப்பு கட்டப்பட்டது. சென்னையை நீர் வந்தடைந்ததும் கீழ்ப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள நீர் ஏருகால் அமைப்பில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட வார்ப்பிரும்புக் குழாய் கிளைப்பிரிவுக் கட்டமைப்பின் மூலம் நகரின் பல பகுதிகளுக்கும் நீரை அனுப்பி வைக்கும் பகிர்மான அமைப்பு உருவாக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜோன்ஸ் கோபுரத்திலிருந்து நிலத்தடியில் அமைக்கப்பட்ட மூடப்பட்ட கட்டுமான நீர் செல் குழாய்கள் அமைத்தல்.
கீழ்ப்பாக்கம் நீர்ப் பணியிடத்தில் மணலை மெல்ல மெல்ல வடிகட்டும் 14 வடிகட்டி அமைப்புகளைக் கட்டுதல்.
கீழ்ப்பாக்கத்தில் மூன்று தூய நீர் சேகரிப்புக் கட்டுமானங்கள் அமைத்தல்.
கடும்பணி செய்யும் நீராவி எந்திரங்களை அமைத்தல்.
குடிநீர்ப் பகிர்மானக் குழாய்கள் கீழ்ப்பாக்கத்தில் நீர்ப் பாய்ச்சும் முதன்மை முகப்பு ஆரம்பமாகும் இடத்தில் 48" ஸ்டீல் வார்ப்பிரும்பு உந்து அமைப்பினை அமைத்தல்.
போதுமான அழுத்தத்துடன் நீர் வழங்கப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் நீர்ப் பகிர்மான அமைப்பினை மாற்றியமைத்து மருவடிவமைப்பு செய்தல்.
திரு.ஜே.டபிள்யூ மேட்லியின் கூற்றுப்படி 1961ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட சென்னையின் 6.6 இலட்சம் மக்களுக்கு ஆளுக்கு 25 காலன் தண்ணீரை தினமும் வழங்கப்படுவதற்குப் போதுமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது மேற்கொண்டும் இதனை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பது 1936ஆம் ஆண்டிலேயே உணரப்பட்டது.