Skip to main content
  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.

1. குறைகள், புகார்கள் மற்றும் நிவர்த்தி செய்யும் முறைகள்

சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள நுகர்வோர்களுக்கு சுகாதாரமான குடிநீர் தேவையான அளவு பகிர்ந்தளிக்க மற்றும் அதனுடைய நிர்வாகப் பகுதியில் உற்பத்தியாகும் கழிவுநீரை, சிறப்பான முறையில் அகற்றிடுவதற்கான குறிக்கோளை நோக்கி வாரியம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வெற்றிகரமான மற்றும் திருப்திகரமான சேவைபயன்பாடுகளை வழங்க வாரியம் பல்வேறு வகையான குறை நிவர்த்தி வழிகளை பொதுமக்களுக்கு சேவைபுரிவதில் வெளிப்படைத் தன்iமையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. மேலும் வாரியம் நுகர்வோர்களின் விமர்சனங்கள், ஆலோசனைகள் மற்றும் விளக்கங்களை பெற்று அதனடிப்படையில் வழங்கப்படும் சேவையை மென்மேலும் மேம்படுத்தவும், வாரியத்தின் செயல்பாட்டை மேன்மைப்படுத்தவும் வரவேற்கிறது. வாரியத்தில் பெறப்படும் புகாhர்கள் சீரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு புகார்தாரருக்கு பதிலளிப்பதுடன், அந்த பிரச்சனையைத் தீர்க்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் சிறப்பாகவும் கூடிய வரையில் திருப்திகரமாகவும் மேற்கொண்டு வருகிறது. புகார்களை பதிவு செய்வதற்கான பல்வேறு விதிமுறைகள் பின்வருமாறு:

1.1 24 மணி நேர புகார் பிரிவு
1.2 இணைய வழி புகார்கள் கண்காணிக்கும் திட்டம் அறிமுகம்
1.3 மின்னஞ்சல் புகார்கள்
1.4 திறந்தவெளி கூட்டங்கள்
1.5 மாண்புமிகு முதல்வரின் முகவரி துறை மனுக்கள்
1.6 குறைதீர்க்கும் பணியில் கைபேசி செயலி அறிமுகம்
1.7 சமூக ஊடகம்
1.8 தேசிய உதவி எண் “14420"
1.9 கட்டணமில்லா எண் “1916"

1.1 24 மணி நேர புகார் பிரிவு

  • சென்னைக் குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள புகார் பிரிவில் 24 மணி நேரமும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு அவைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பணிமனைப் பொறியாளர்களுக்கு அலைபேசி மூலமாக அனுப்பப்படுகின்றது.
  • வலைதளம் சார்ந்த இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டு நுகர்வோரிடமிருந்து கணினி வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் புகார்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. புகார்கள் பெறப்பட்ட பிறகு, ஒரு பிரத்யேக புகார் எண் தாமாக உருவாக்கப்பட்டு உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலமாக நுகர்வோருக்கும், பணிமணை பொறியாளருக்கும் அனுப்பப்படுகிறது
  • நுகர்வோர் தங்களது புகார்களை எவ்வித தடையுமின்றி பதிவு செய்வதற்காக புகார் பிரிவில் தொலைபேசி எண்கள் 044– 4567 4567, 14420, 1916 (கட்டணமில்லா எண் ) மற்றும் 044– 2845 4040 நிறுவப்பட்டுள்ளன.
  • புகார்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகம் / பணிமனை அலுவலகம் / முதுநிலை கணக்கு அலுவலருக்கும் கணினி மூலமாக அனுப்பிவைக்கப்படுகிறது.
  • கைபேசி பயன்பாட்டின் மூலமாக புகார்களை பதிவு செய்யும் வசதியும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பணிமனைப் பொறியாளர்கள் / பகுதி அலுவலக முதுநிலை கணக்கு அலுவலர்/ பகுதிப்பொறியாளர்கள் இதர அலுவலர்கள் புகாரில் தெரிவிக்கப்பட்ட பிரச்சனையின் சரியான கோணம் மற்றும் இடத்தை துல்லியமாக அடையாளம் காணவும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவும் இயலுகிறது. உரிய நடவடிக்கை எடுத்த பிறகு நடவடிக்கை விவரமானது புகைபடத்துடன் வெளியிடப்படும்.

1.2 இணைய வழி புகார்கள் கண்காணிக்கும் திட்டம் அறிமுகம்

  • புகார்கள்/ குறைதீர்ப்பு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண்பதற்காக சென்னைக்குடிநீர் வாரியத்தில் ஒரு இணைய தள அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வாரியத்தின் குறை தீர்வு மற்றும் சேவையில் இணைய வழி புகார்கள் கண்காணிக்கும் திட்டம் மேலும் ஒரு மகுடமாகும்.
  • வாரியத்தின் அனைத்து பணிமனை அலுவலகங்கள், அனைத்து துணைப் பகுதி பொறியாளர்கள், அனைத்து பகுதிப்பொறியாளர்கள், குறைநிவர்த்தி பிரிவு மற்றும் மேல் அதிகாரிகளுக்கும் கணினி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
  • நுகர்வோர் தங்களது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றலின் இயக்கம் மற்றும் பராமரிப்பு, வரி/ கட்டணம் மற்றும் இதர குறைகளுக்கான புகார்களை வாரியத்தின் இணையதளமான https://chennaimetrowater.tn.gov.in-ன் மூலம் பதிவு செய்யலாம்.
  • புகார்தாரர்கள் வாரியத்தின் வலைதளத்தில் புகாரை பதிவு செய்த உடனேயே புகார் எண்ணை குறுஞ்செய்தி மூலமாகப் பெறலாம்.
  • பதிவு செய்யப்பட்ட புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக புகாரின் விவரம் அதிகபட்சம் 3 நிமிடங்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட பணிமனை பொறியாளர்/ முதுநிலை கணக்கு அலுவலருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது.
  • புதிய இணையவழி கண்காணிக்கும் அமைப்பு மக்கள் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச கால வரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • புதிய இணைய வழி கண்காணிக்கும் திட்டத்தில், புகார்களை கால வரம்பிற்குள் முறையாக சரிசெய்யாவிடில் உயர் அலுவலருக்கு இந்த சரிசெய்யப்படாத புகார் தானாக அனுப்பி வைப்பதற்கான வசதியும் உள்ளது.
  • இணையவழி புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரங்கள் புகார்தாரருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.
  • அனைத்து மேல் அதிகாரிகளாலும் எந்த பகுதி, எந்த நேரத்தில் பெறப்பட்ட புகார்கள் நிலுவையில் இருந்தாலும் பார்க்க இயலும். இந்த வசதியினால் புகார்கள் மீது விரைவான தீர்வு காண்பதை கண்காணிக்க இயலும்.

1.3 மின்னஞ்சல் புகார்கள்

சென்னை குடிநீர் வாரிய இணையதளத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலாண்மை இயக்குநர்,செயல் இயக்குநர்,பொது மேலாளர், மற்றும் குறை நிவர்த்தி அலுவலர்களின் மின்னஞ்சல் மூலம் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் உரிய நடவடிக்கைகாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பபடுகிறது.கள அதிகாரிகளின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலமாக பதில் தெரிவிக்கப்படுகிறது.

1.4 திறந்தவெளி கூட்டங்கள்

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான முறைகளில் (நேரடியாக புகார் செய்வதை தவிர) வாரிய அலுவலர்களுடன் நுகர்வோர் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. பொதுமக்களுடைய குறைகளை நேரடியாக கேட்கும் விதமாக திறந்த வெளி கூட்டங்கள் எல்லா மாதங்களிலும் இரண்டாவது சனிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 15 பகுதி அலுவலகங்களிலும் வாரியத்தால் நடத்தப்படுகிறது.
  • பொதுமக்கள், அனைத்து தன்னார்வ அமைப்புகள், நுகர்வோர் செயல் அமைப்புகள் நல வாழ்வு சங்கங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் செயல்படும் விருப்பமுடைய அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்த திறந்த நிலை கூட்டங்களுக்கு பத்திரிக்கை செயலிகள் மூலம் அழைக்கப்படுவார்கள்.
  • திறந்த நிலை கூட்டங்களுக்கு வாரியத்தின் உயர் அதிகாரிகள் (மேற்பார்வை பொறியாளர்) தலைமை தாங்க நியமிக்கப்படுகிறார்கள்.
  • திறந்த நிலை கூட்டங்கள் மூலம் பங்கேற்கும் பொது மக்கள்/ நுகர்வோர்கள் அலுவலர்களை சந்தித்து நேரில் தங்களது குறைகளை தெரிவிக்க இயலும்.
  • திறந்தவெளி கூட்டங்கள் நடத்தப்படுவதால் கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களது கருத்துக்கள், மற்றும் தேவையான இடங்களில் பணி ஆற்றலை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்க இயலும்.
  • திறந்தவெளி கூட்டங்களில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டு, அங்கு பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது.

1.5 மாண்புமிகு முதல்வரின் முகவரி துறை மனுக்கள்:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.05.2021 அன்று "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்கின்ற புதிய திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் மக்களின் அனைத்து புகார்களையும் 100 நாட்களுக்குள் தீர்க்க ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அனைத்து குறைதீர்க்கும் வசதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு "முதல்வரின் முகவரி துறை" புதிதாக உருவாக்கபட்டு, அதன் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

1.6 குறைதீர்க்கும் பணியில் கைபேசி செயலி அறிமுகம்:

  • நுகர்வோர்கள் தங்கள் குறைகளை வாரிய அதிகாரிகளுக்கு எந்த நேரத்திலும் விரைவாகவும், வசதியாகவும் கைபேசி மூலம் தெரிவிக்க இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் தங்களது குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நிலவரத்தை அவ்வப்போது தெரிந்து கொள்ள இந்தசெயலி உதவுகிறது.https://play.google.com/store/apps/details?id=metrowater.cmwssb.grs என்ற இணைப்பின் மூலம் கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • வாரியம், இந்த கைபேசி செயலி சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளதன் மூலம் புகார்களுக்கான பிரச்சினையை உரிய புகைபடத்துடன் வெளிப்படுத்தல் மற்றும் அதை சரி செய்தல் ஆகிய அதனுடைய செயல் திறனினை மேம்படுத்திக்கொண்டுள்ளது.

1.7 சமூக ஊடகம்

சென்னை குடிநீர் வாரியமானது கீச்சீடு மற்றும் முகநூல் (Twitter & facebook) போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பொது மக்களுடன் இணைந்துள்ளது. மேலும் சமுக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள புகார்கள் ஒரு சிறப்பு குழு மூலம் கண்காணித்து சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு புகார்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றது.

1.8 தேசிய உதவி எண் “14420"

கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை பாதுகாப்பற்ற முறையிலும், உரிய கவசங்கள் அணியாமலும் சுத்தம் செய்தல் மற்றும் இயந்திர நுழைவு வாயிலில் அனுமதியின்றி நுழைவது குறித்த புகார்களுக்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட “சஃபாய் மித்ரா சுரக்ஷா சேலஞ்" திட்டத்தின் கீழ் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட தேசிய உதவி எண். “14420" சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 24*7 அடிப்படையில் இயங்கி வருகிறது. பொது மக்கள் தங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் ஏற்படும் கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் போது, பாதுகாப்பற்ற முறையிலும், உரிய கவசங்கள் அணியாமலும் சுத்தம் செய்தல் மற்றும் இயந்திர நுழைவு வாயிலில் அனுமதியின்றி நுழைவது குறித்த புகார்களை தேசிய உதவி எண். “14420" என்ற எண்ணில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

1.9 கட்டணமில்லா எண் “1916"

குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான நுகர்வோரின் புகார்களுக்காக கட்டணமில்லா எண் 1916 புகார் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. குறை நிவர்த்தி பிரிவின் செயல்பாடுகள்:

  • அனைத்து விதமான புகார்களையும் கையாள வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் குறைநிவர்த்திப் பிரிவு செயல்படுகிறது.
  • குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான அனைத்து புகார்கள், குறைநிவர்த்தி மனுக்கள், வரி மற்றும் கட்டணம், விழிப்புக்குழுவிற்கான புகார்கள், பொது புகார்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகள் போன்றவை வாரிய அலுவலகத்தில் உள்ள குறைநிவர்த்திப்பிரிவில் பதிவு செய்யப்படுகின்றன.
  •  மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அலுவலகம், மாண்புமிகு மேயர் அலுவலகம், நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல்துறை செயலர் அலுவலகம், மேலாண்மை இயக்குநர் அலுவலகம், செயல் இயக்குநர் அலுவலகம், வாரியத்தின் முதுநிலை அலுவலர்கள், நடுவண் அரசின் புகார்கள், மின்னஞ்சல் புகார்கள், வாரியத்தின் தபால்துறையில் பெறப்படும் புகார்கள் குறை நிவர்த்திப் பிரிவில் பதிவு செய்யப்படுகின்றன.
  • குறை நிவர்த்திப் பிரிவில் பெறப்படும் அனைத்து புகார் மனுக்களும், தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அலுவலர்/ துறைகளுக்கு தீர்வு காண மற்றும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக அனுப்பப்படுகின்றன. அந்த புகார்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் மனுதாரருக்கு அனுப்பப்பட்ட பதில் நகல் குறை நிவர்த்திப் பிரிவால் கண்காணிக்கப்படுகிறது.
  • மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறைநிவர்த்தி பிரிவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, காலாந்திர அறிக்கைகள் வாரியத்தின் உயர் அதிகரிகளுக்கு அனுப்பப்படுகிறது.