முடிவெடுப்பது/குறைகளைத் தீர்ப்பது தொடர்பாக பொதுமக்களுடன் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு ( பிரிவு 4 (1) (b)(viii)
பொதுமக்களுடைய குறைகளை நேரடியாக கேட்கும் விதமாக திறந்த வெளி கூட்டங்கள் எல்லா மாதங்களிலும் இரண்டாவது சனிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 15 பகுதி அலுவலகங்களிலும் வாரியத்தால் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள், அனைத்து தன்னார்வ அமைப்புகள், நுகர்வோர் செயல் அமைப்புகள் நல வாழ்வு சங்கங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் செயல்படும் விருப்பமுடைய அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்த திறந்த நிலை கூட்டங்களுக்கு பத்திரிக்கை செயலிகள் மூலம் அழைக்கப்படுவார்கள்.
திறந்த நிலை கூட்டங்களுக்கு வாரியத்தின் உயர் அதிகாரிகள் (மேற்பார்வை பொறியாளர்) தலைமையில் நடத்தப்படுகிறது.
திறந்த நிலை கூட்டங்கள் மூலம் பங்கேற்கும் பொது மக்கள்/ நுகர்வோர்கள் அலுவலர்களை சந்தித்து நேரில் தங்களது குறைகளை தெரிவிக்க இயலும்.
திறந்தவெளி கூட்டங்கள் நடத்தப்படுவதால் கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களது கருத்துக்கள், மற்றும் தேவையான இடங்களில் பணி ஆற்றலை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்க இயலும்.
திறந்தவெளி கூட்டங்களில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டு, அங்கு பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது.