சென்னை பெருநகர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் பொறியியல் துறையின்கீழ் திட்டம் மற்றும் வடிவமைப்புபிரிவு செயல்பட்டுவருகிறது. மேற்பார்வைபொறியாளர் (திட்டம்மற்றும்வடிவமைப்பு), அவர்களின் தலைமையின் செயல்படும் இப்பிரிவு, சென்னை பெருநகரத்திற்கு குடிநீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் அமைப்பு களைஏற்படுத்துவதற்கான ஆய்வு, உருவாக்கம், விரிவான பொறியியல் திட்டமதிப்பீடு ஆகியவற்றில் இந்தஅலுவலகம் ஈடுபட்டுள்ளது.
இவைதவிர, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியம் போன்றபிற அரசு நிறுவனங்கள் உருவாக்கிய அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் அமைப்புகளை, வைப்புப்பணி அடிப்படையில் உருவாக்குவதில் இந்த பிரிவு ஈடுபட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக்கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களின் குடிநீர் தேவைக்காக, அவர்களின் கோரிக்கை அடிப்படையில், இப்பிரிவு திட்ட உருவாக்கம் தயாரித்து கொடுக்கிறது.
சென்னை நகரை அடுத்துள்ள 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25
ஊராட்சிகளை இணைத்து சென்னை பெருநகர், 200 வார்டுகளுடன் (முந்தய எண்.155 வார்டுகள்) 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு (முந்தைய பரப்பு 174 ச.கி.மீ) விரிவுபடுத்தப்பட்டது.
விரிவாக்கப்பட்ட சென்னை மாநகரபகுதிகளின் குடிநீர்திட்டப்பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் விரிவான திட்டஅறிக்கைகள் தயாரிக்கப்படுகிறது.
விரிவாக்கப்பட்ட சென்னை மாநகர பகுதிகளின் குடிநீர்திட்டப் பணிகளின் தற்போதைய நிலை
:
31 பகுதிகளில் குடிநீர்திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
10 பகுதிகளில் குடிநீர்திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
1 பகுதிக்கு ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்பட்டு, ஒப்பந்தங்கள் மதிப்பீட்டில் உள்ளது.
விரிவாக்கப்பட்ட சென்னை மாநகரபகுதிகளில் பாதாளசாக்கடை திட்டப்பணிகளின் தற்போதைய நிலை
:
17 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
9 பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
1 பகுதிக்கு ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்பட்டு ஒப்பந்தங்கள் மதிப்பீட்டில் உள்ளது.
15 பகுதிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது அதற்கான நிதி
உதவி பெற்ற பின் பணிகள் மேற்கொள்ளப்படும்.
1. குடிநீர் திட்டங்கள் – 1 (செம்மஞ்சேரி) பாதாளசாக்கடை திட்டங்கள் – 16
(ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம்-துரைப்பாக்கம்,
ஜல்லடம்பேட்டை, நந்தம்பாக்கம், புழல், மாத்தூர், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம்,
இடையான்சாவடி, சடையான்குப்பம், ஈஞ்சம்பாக்கம், மாதவரத்தின் விடுபட்ட
பகுதிகள்) ஆகியவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மற்றும் இதற்கான நிதி ஆதாரம் AMRUT 2.0 மற்றும் வெளிநாட்டு நிதி
நிறுவனங்களிடமிருந்து பெற உத்தேசிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2. சென்னை மாநகருக்கான தற்போதுள்ள குடிநீர் பரிமாற்ற குழாய்களை
வலுப்படுத்துதல் / மாற்றுதல் மற்றும் தற்போதுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
மற்றும் நீர் விநியோக நிலையங்களை இணைத்து குடிநீர் பரிமாற்ற குழாய் (ரிங்
மெயின்) அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கை
தயாரிக்கும் பணி கலந்தறிதற்குறியரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
3. பெருநகர சென்னை நகரின் மையப்பகுதியில் (174 சதுர கி.மீ.) இருக்கும் கழிவுநீர்
கட்டமைப்பை மேற்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்தல்
மற்றும் சென்னை முழுவதும உள்ள கழிவு நீர் இறைக்கும் நிலையங்களுக்கான தகவல்
கையகப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடுகள் அமைப்பை (SCADA) உருவாக்குதற்கான
(426 சதுர கீ.மீ.) விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி கலந்தறிதற்குறியரால்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றம் கழிவுநீரகற்று வாரியத்தின் குடிநீர்
மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள் மற்றும் பயன்பாட்டு வரைபடங்கள், புவி
இடம்சார்ந்த தொழில் நுட்பங்களை (GIS) பயன்படுத்தி, தயாரிக்கும் பணி
கலந்தறிதற்குரியரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.