Skip to main content
  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.
கழிவுநீர் அமைப்பு

1. (1890 ஆம் ஆண்டின் முற்பகுதியில், நகரத்தில் உள்ள மேற்பரப்புக் கழிவுநீர் வடிகால்கள் கழிவுநீர் உந்து நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, கழிவுநீரானது மக்கள் வசிக்காத இடத்திற்கு வெளியேற்றப்பட்டது. நிலப்பரப்பு அடிப்படையில் வேகமாக வளர்ந்துவரும் நகரங்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஒருங்கிணைந்த வடிகால்திட்டம் 1907-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1910-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 1914-ஆம் ஆண்டு படிப்படியாக முடிக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட 6.5 இலட்சம் மக்கள் தொகைக்கு நீர் வழங்கலின் அடிப்படையில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 114 லிட்டராக இந்த அமைப்புகள் வடிவமைக்கப்பட்டன. இந்த அமைப்பு முதலில் இராயபுரம், புரசைவாக்கம் மற்றும் நேப்பியர் பூங்காவில் உள்ள 3 கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் நகரத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள காசிமேட்டில் கடலில் கழிவுநீரை வெளியேற்றும் விசைமின் இணைப்பு மற்றும் செங்கல் புவியீர்ப்பு சாக்கடைகளின் வலையமைப்பைக் கொண்டிருந்தது.

2. புரசைவாக்கம் கழிவு நீரேற்று நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் ஒரு பகுதியை கொடுங்கையூரில் உள்ள கழிவுநீர் பண்ணைக்குத் திருப்பிவிட 1956-ஆம் ஆண்டு இந்த அமைப்பில் அடிப்படை மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர், ஒருங்கிணைந்த கழிவுநீர் மேலாண்மைத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் 1961 இல் தொடங்கப்பட்டு, விரிவடைந்து வரும் நகரம் மற்றும் பெருகி வரும் மக்கள் தொகையின் அமைப்புத் தேவைகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நகரத்திற்கான கழிவுநீர் அமைப்பு ஐந்து வடிகால் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முழு நகரத்தையும் உள்ளடக்கிய பெரிய அமைப்புகளைக் கொண்ட இந்த மண்டலங்களில் கழிவுநீர் மண்டலச் சேகரிப்புகள், போக்குவரத்து, சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் வசதிகள் இருந்தன.

கழிவுநீர் அமைப்பின் மண்டலம்-I நகரின் பழமையான பகுதியாகும், இது கிழக்கில் வங்காள விரிகுடாவால் சூழப்பட்ட நகரத்தின் வடகிழக்குப் பகுதியிலும், வடக்கே நகர எல்லைகள், மேற்கில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் தெற்கே பைகிராஃப்ட்ஸ் சாலையிலும் உள்ளது. தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, இராயபுரம், ஜார்ஜ்டவுன், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த மண்டலம்-1ல் சேகரிக்கப்படும் கழிவுநீர், கொடுங்கையூரில் (மண்டலம்-1) உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.

மண்டலம்-II ஐந்து பெரிய அமைப்புகளில் மிகப் பெரியது, இது நகரத்தின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு சேவை செய்கிறது. இது கிழக்கில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் வடக்கில் மாநகராட்சி எல்லைகளால் சூழப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அயனாவரம், பெரம்பூர், வியாசர்பாடி, செம்பியம், கொளத்தூர், பெரியார்நகர், ஜவஹர்நகர், கொடுங்கையூர் போன்ற பகுதிகளுக்கு இந்த சேவை இருக்கிறது. இந்த மண்டலங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீர் 1989-ஆம் ஆண்டு 80 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கொடுங்கையூரில் (மண்டலம்-II) நிறுவப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.

மண்டலம்-III மேற்கு நோக்கி மண்டலம்-II மற்றும் மண்டலம்- IV க்கு இடையில் அமைந்துள்ளது. தியாகராயநகர், கோடம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணாநகர் மற்றும் கோயம்பேடு ஆகியவை இதில் அடங்கும். இந்த மண்டலத்தில் சேகரிக்கப்படும் கழிவுநீர், கோயம்பேட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு (மண்டலம்-III) கொண்டு செல்லப்படுகிறது.

மண்டலம்-IV என்பது நகரத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள பெரிய அமைப்புகளில் மிகச்சிறியது. அசோக்நகர், சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, கே.கே.நகர் மற்றும் நெசப்பாக்கம் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. இந்த மண்டலத்தில் சேகரிக்கப்படும் கழிவுநீர் நெசப்பாக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு (மண்டலம்-IV ஆலை) கொண்டு செல்லப்படுகிறது, இது 1974 ஆம் ஆண்டு 23 எம்.எல்.டி திறனுடன் நிர்மாணிக்கப்பட்டது.

மண்டலம்-V ஐந்து பெரிய அமைப்புகளில் இரண்டாவது பெரிய அமைப்பு. இது நகரின் தெற்கே அடையாறு நதியால் பிரிக்கப்பட்டுள்ளது. ஐஸ்ஹவுஸ், மயிலாப்பூர், அடையாறு, கிண்டி, வேளச்சேரி, காந்திநகர், இந்திரநகர் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும். இந்த மண்டலத்தில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பெருங்குடி (மண்டலம்-5) சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

3. கழிவுநீர் மேலாண்மைக்கான பெருந்திட்டம் 1978 ஆம் ஆண்டில் 2008 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகளுக்குக் கழிவுநீர் அமைப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஏற்கெனவே உள்ள அமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இந்தப் பெருந்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. 1989-1991 ஆம் ஆண்டில், கழிவுநீர் இடைமறிப்பு அமைப்பு, கழிவுநீர் உந்து நிலையங்கள், பம்பிங் மெயின்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் குறுகிய மற்றும் நீண்டகால மேம்பாட்டுக்கான முன்மொழிவுகள் உருவாக்கப்பட்டன. சேகரிப்பு அமைப்பு, பம்புசெட்டுகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. வில்லிவாக்கத்தில், வில்லிவாக்கம் சிட்கோ நகருக்காக வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட 5 எம்.எல்.டி திறன் கொண்ட ஒரு சிறிய சுத்திகரிப்பு நிலையம் சென்னை குடிநீர் வாரியத்தால் 1984 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டு நடந்த வாரியம் இப்போது கைவிடப்பட்டது. வில்லிவாக்கம் தொடர் உந்து நிலையத்தில் பெறப்படும் கழிநீர் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

4. 2021 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகையின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த பெருந்திட்டம் 1991 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது இந்தத் திட்டத்தின் மூலம் (a) ஏற்கெனவே உள்ள கழிவுநீர் கொண்டு செல்லும் முறையை வலுப்படுத்துதல், முக்கியமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல், கழிவுநீர் வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் கொண்டு செல்லும் வசதிகளை ஏற்படுத்துதல், (b) கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இப்பணிகள், முன்னுரிமை அடிப்படையில், சென்னை பெருநகர குடிநீர் மற்றம் கழிவுநீர் அகற்று வாரியம் நிறுவனத்தின் மூலம் நிதி திரட்டப்பட்டு, படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டன.

5. கழிவுநீர் சேகரிப்பு, கொண்டு செல்லுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் அகற்றுதல் ஆகியவற்றிற்கான விரிவான வடிவமைப்புப் பொறியியல் 1995-1998 ஆம் ஆண்டுகளில், சார்பற்ற ஆலோசகர்கள் மூலம் இறுதி செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை மற்றும் கிருஷ்ணா தண்ணீர் விநியோகத் திட்டத்தால் மக்களுக்குத் தண்ணீர் கிடைப்பது அதிகரித்தது போன்றவை காரணமாகக் கழிவுநீர் சேகரிப்புத் திறனை அதிகரித்தல், கொண்டுசெல்லுதல் மற்றும் அகற்றல் போன்றவற்றை விரிவுப்படுத்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.1,300 கோடிஆகும். இந்த விரிவான பொறியியல் வடிவமைப்பு அடிப்படையில், 2000-ஆம் ஆண்டு சென்னை மாநகர நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 2011-ஆம் ஆண்டு கழிவுநீர் வெளியேற்றத்திற்காக முதற்கட்டமாக ரூ.720.00 கோடி மதிப்பீட்டில் திட்டக் கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டன. இந்தத் திட்டத்தில் 59.2 கி.மீ. தூரத்திற்கு இடைமறிப்பான்களை அமைக்கும் திட்டம் உள்ளது. 28 எண்ணிக்கையில் உந்து நிலையங்கள், 3 புதிய கழிவுநீர் உந்து நிலையங்களைக் கட்டுதல், 28.85 கி.மீ. தூரத்துக்குக் கழிவுநீர் பிரதான குழாய்கள், புவியீர்ப்பு மூலம் கழிவுநீர் கொண்டு செல்லும் 17.3 கி.மீ க்கான அமைப்புகள் மற்றும் 264 எம்.எல்.டிக்கு (கொடுங்கையூர் - 110 எம்.எல்.டி, கோயம்பேடு 60 எம்.எல்.டி, நெசப்பாக்கம் - 40 எம்.எல்.டி மற்றும் பெருங்குடி 54 எம்.எல்.டி) கழிவுநீர் சுத்திகரிப்புத் திறன் விரிவாக்கம் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்குகின்றன. இப்பணிகள் 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பட்டன.

6. வீராணம் குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ், 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மக்களின் தேவைக்கேற்பக் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் அகற்றுவதற்கான விரிவான வடிவமைப்பு மற்றும் பொறியியல் 2007-2008 ஆம் ஆண்டில் இறுதி செய்யப்பட்டது. ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புறப் புதுப்பித்தல் இயக்கத்தின் (JNNURM) கீழ் இந்த விரிவான வடிவமைப்பு மற்றும் பொறியியல், திட்ட முன்மொழிவுகள் செயல்படுத்தப்பட்டன. 234 எம்.எல்.டிக்குக் கழிவுநீர் சுத்திகரிப்பு திறனை விரிவாக்கம் செய்ய நெசப்பாக்கத்தில் (மண்டலம்-IV) 54 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பெருங்குடியில் (மண்டலம்-V) 60 எம்.எல்.டி திறன்கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கோயம்பேடு (மண்டலம்-III) 120 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இந்த திட்டத்தில் உள்ளன. இப்பணிகள் பிப்ரவரி-2009-ல் தொடங்கப்பட்டு ஜூன்-2015-ல் நிறைவடைந்தன. மண்டலம்–III தற்போதுள்ள ஆலைகளுடன் கூடுதலாக, 120 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், உயிரி எரிவாயு மின் உற்பத்தி வசதிகளுடன் ஜூன் - 2015 ஆம் ஆண்டில் JNNURM இன் கீழ் மொத்தம் ரூ. 87.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டலம் - III இல் தற்போதைய மற்றும் எதிர்காலக் கழிவுநீர் உற்பத்தியை நிர்வகிப்பதற்காக இது ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்டலம் - IV இல் தற்போதுள்ள ஆலைக்குக் கூடுதலாக, 54 எம்.எல்.டி திறன் கொண்ட உயிரி எரிவாயு மின் உற்பத்தி வசதிகளுடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக அக்டோபர்-2014 ஆம் ஆண்டில் JNNURM இன் கீழ் ரூ. 57.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டலம் - IV இல் தற்போதைய மற்றும் எதிர்காலக் கழிவுநீர் உற்பத்தியை நிர்வகிக்க இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்டலம் - V ல் தற்போதுள்ள ஆலைக்குக் கூடுதலாக, 60 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், உயிரி எரிவாயுமின் உற்பத்தி வசதிகளுடன் ஜனவரி-2012 இல் JNNURM இன் கீழ் மொத்தம் ரூ. 52.39 கோடிகள் மண்டலத்தில் தற்போதைய மற்றும் எதிர்காலக் கழிவுநீர் உற்பத்தியை நிர்வகிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட காற்றோட்டத்துடன் கூடிய 12 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஜூன்-2003 இல் முன்னாள் ஆலந்தூர் நகராட்சியால் தொடங்கப்பட்டது இந்த அலகு நவம்பர்-2011 இல் சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்தின் போது ஆலை சென்னை குடிநீர் வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

வரிசை எண் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பெயர் தொடங்கப்பட்ட ஆண்டு செயலாக்கும் திறன் (எம்.எல்.டி)
1. கொடுங்கையூர் - மண்டலம் I . 1991 80
2. கொடுங்கையூர் - மண்டலம் II. 1989 80
3. கொடுங்கையூர்- மண்டலம் I மற்றும்II 2006 110
4. கோயம்பேடு - மண்டலம்III 1978 34
5. கோயம்பேடு - மண்டலம்III 2005 60
6. கோயம்பேடு - மண்டலம்III 2015 120
7. நெசப்பாக்கம் - மண்டலம்IV 1974 23
8. நெசப்பாக்கம் - மண்டலம்IV 2006 40
9. நெசப்பாக்கம் - மண்டலம்IV 2014 54
10. பெருங்குடி- மண்டலம்V 2006 54
11. பெருங்குடி- மண்டலம்V 2012 60
12. பெருங்குடி- மண்டலம்V 2003 12
Total   727

இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய கொள்ளளவு நாளொன்றுக்கு 727 மில்லியன் லிட்டர் ஆகும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்பாட்டில், உயிரி-எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு, ஆலைகளை இயக்குவதற்கான சக்தியை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இது தற்செயலாக வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைத் குறைக்கிறது மற்றும் கார்பன் வர்த்தகத்தை வழங்குகிறது. சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தூய்மையான மேம்பாட்டுப் பொறி முறையை (CDM) ஏற்றுக் கொண்டது, இது ஆற்றலுக்கான செலவில் மாதத்திற்கு ரூ.45.46 இலட்சத்தை மிச்சப்படுத்துகிறது.

8. 1978 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கழிவுநீர் சேவைகளின் வளர்ச்சி சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மே 2018 வரை வாரியம் பின்வருமாறு அமைக்கப்பட்டது.

விவரங்கள் 1978 மார்ச் 2018
உள்ளடக்கிய பகுதி 74% 82%
மொத்த கழிவுநீர் அமைப்பைப் பயன்படுத்துபவர்கள் 1,14,000 8,76,891
கழிவுநீர் மெயின்களின் நீளம் 1,223 கி.மீ. 5,200 கி.மீ.
உந்து நிலையங்களின் எண்ணிக்கை 58 265
செயல்படுத்தும் ஆலைகள் 3 எண்ணிக்கை. 12 எண்ணிக்கை.
செயலாக்கத்திறன் 57 எம்.எல்.டி 727 எம்.எல்.டி